எங்களை பற்றி

எல்.எல்.ஏ. ஆன்லைன் என்பது பங்கேற்பாளர்களுக்கு கலைநய பார்வையையும் , படைப்பாற்றலையும் வளர்த்துக் கொள்வதற்கான ஒரு கட்டமைப்பான கற்றல் திட்டத்தின் தளமாக வடிவைக்க பட்டிருக்கிறது. ஒவ்வொரு பாடமும் முற்போக்கான வரிசையில் தொடர் கற்றல் தொகுதிகளாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தொகுதிகளும் அடுத்த இடத்திற்குச் செல்வதற்கு முன்னர் முழுமையாக புரிந்து கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துகின்றன

ஒரு தொகுதி பாடம் ஒரு வீடியோ மூலம் வழங்கப்படுகிறது, அதன்பிறகு பங்கேற்பாளர்களுக்கு கற்றுக்கொண்டதை உறுதிபடுத்த ஓரு அசைன்மென்ட் இருக்கும். லைட் அண்ட் லைஃப் அகாடமியின் முன்னாள் மாணவர்கள், பயிற்சிக்கான கருத்துக்களை வழங்குவதன் மூலமும், நல்ல படங்களை உருவாக்குவதற்கு உத்வேகம் அளிப்பதன் மூலமாகவும் நல்ல வழிகாட்ட இருப்பார்கள்.

LLA ஆன்லைனில் இருக்கும் ஒவ்வொரு பாடமும், செயல்முறை திட்டதைப் பின்பற்றுகிறது, இதில் தோல்வியுறும் மாணவர் அடுத்த தொகுதிக்கு முன்னேற முடியாது / படிப்பை தொடர முடியாது. இந்த கோட்பாடு, புகைப்படம் எடுத்தலில் ஒவ்வொரு அம்சத்தையும் பற்றிய அறிவு முழுமையாக மற்றும் திறமையாக இருக்கிறது என்பதை உறுதி செய்ய உதவுகிறது.

இந்த பாடத்திட்டங்கள் ஒன்பது இந்திய மொழிகள் (பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஒரியா, தமிழ், தெலுங்கு) மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது.

LLA ஆன்லைன் உருவான கதை

இக்பால் முகமது, இந்தியாவுக்கு திரும்புவதற்கு முன்பு, கலிஃபோர்னியாவின் உள்ள ப்ரூக்ஸ் நிறுவனத்தில் புகைப்படக் கலையில் பட்டம் பெற்று, ஹாலிவுட்டில் மிகப்பெரிய தொழில்முறை புகைப்பட கலைஞர்களோடு பணிபுரிந்த அனுபவம் அனைத்தும், எவ்வளவு அதிஷ்டமானது என்பதை உணர்ந்து இருந்தார்.

இஃபாலின் புகைப்பட கலை, மும்பை மற்றும் பெங்களூர் விளம்பர உலகில் தனித்துவம் வாய்ந்தவையாக இருந்தது. இவர் தேசிய மாற்று சர்வதேச அளவில் வெற்றிபெற்றவராக கௌரவிக்கப்பட்டார். தினமும், ஆர்வமுள்ள புகைப்படக்காரர்கள் இக்பாலின் ஸ்டூடியோவிற்கு சென்று தங்களது புகைப்பட திறனை வளர்த்துக்கொள்ள இவரின் ஆலோசனையைப் பெற்றனர். இவர்கள் இக்பாலிடம், இந்தியாவில் தொழில்ரீதியாக புகைப்பட கலையை கற்பிப்பதற்கான ஒரு நிறுவனம் தேவை என்பதை வலியுறுத்தினார். 2001 ஆம் ஆண்டில், அனுராதாவின் உதவியுடன், லைட் அண்ட் லைஃப் அகாடமி அமைக்கப்பட்டது, இது நாட்டின், முதல் முழு வசதி பெற்ற, தொழில்முறை புகைப்படம் கற்றல் நிறுவனம் ஆகும்.

லைட் அண்ட் லைஃப் அகாடமி, கடந்த 17 ஆண்டுகளில், நாட்டிற்கு மிகவும் திறமை வாய்ந்த பல புகைப்பட தொழில் நுட்ப கலைஞர்களை தந்திருக்கிறது. இவர்கள் தொழில் துறையில் தங்களின் தனித்துவதில் பல்வேறு உயரங்களை தொட்டதற்கு இவர்கள் வாங்கிய தேசிய மற்றும் சர்வதேச விருதுகளே சாட்சி!

பார்க்க www.llacademy.org  &  www.iqbalmohamed.com

இக்பால் மற்றும் அனுராதா இருவரும் நாடு முழுவதும் வளர்ந்து வரும் புகைப்படகலைஞர்களின் ஆர்வத்திற்கு இக்கலையை கொண்டு செல்ல கனவு கண்டனர். இதன் முதல் படியாக, “Portrait & Function Photography” என்னும் புத்தகத்தை எட்டு இந்திய மொழிகளிலும் மற்றும் ஆங்கிலத்திலும் வெளியிட்டனர். இதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததுடன், மேலும் இது போன்ற பல செயல்கள் செய்ய எங்களை ஊக்க படுத்தியது. லைட் & லைப் அகாடமியின் கற்றுக் கொடுத்தலில் உள்ள அனுபவம் மற்றும் இப்போது உள்ள தொழில் நுட்ப வசதிகள் இவற்றை மையமாக வைத்து, தரமாக புகைப்படம் எடுக்கும் கலையை இன்னும் பரத்து விரிந்த பார்வையாளருக்கு எடுத்து செல்ல, இதுவே சரியான தருணம் என்பதை முடிவெடுக்க வைத்தது.

LLA online - ஓர் இதய பூர்வமாக எடுக்கப்பட்ட முயற்சி. இது புகைப்பட கலையை பற்றி எதுவும் தெரியாதவர்களுக்காகவும் மற்றும் சிறுது தெரிந்தவர்களுக்காகவும் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. இதன் மூலம் தங்களுக்குள் இருக்கும் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்த கற்றுக்கொள்வர் . இந்த திட்டம், எதிலும் முழுமையை தேடும், இக்பால் மொஹமது அவர்களால் வடிவமைக்க பட்டிருக்கிறது. அவர் எப்போழுதும் புகைப்படம் சார்த்த எந்த செயல் செய்வதிலும் பேரார்வம் கொண்டவர் .

எல்.எல்.ஏ. ஆன்லைன் திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்க காரணம், LLA-வின் முன்னாள் மாணவர்களின் மிகப்பெரிய மற்றும் உற்சாகமான ஆதரவைக் கொண்டுள்ளது தான். இவர்கள் இத்திட்டதை உருவாக்க உதவியதுடன், பங்கேற்பாளர்களை வழிநடத்தவும், அவர்களின் சுய அனுபவகங்களை பதிவு செய்து, அவர்களுக்குள் இருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணரும் திறவு கோலாக உள்ளனர்.

எல்.எல்.ஏ யின் நோக்கம், பங்கேற்பாளர்கள் தங்கள் படைப்பாற்றல் பக்கங்களைக் கண்டுபிடித்து, வளர்த்து, வெளிப்படுத்துவதற்கு ஒரு தளம் அமைத்து தந்து, அதற்கு தேவையான உள்ளீடு / அறிவு / வழிகாட்டுதலை வழங்குவதே ஆகும்.

இக்பால் முகமது

இக்பால் முகமது

இக்பால் முகமது இந்தியாவின் முன்னணி விளம்பரம் புகைப்படகாரரில் ஒருவர். ப்ரூக்ஸ் இன்ஸ்டிட்யூட்டீன் முன்னால் மாணவர், புகழ்பெற்ற லயோலா கல்லூரியில் (சென்னை), வரலாற்று மற்றும் அரசியல் விஞ்ஞானத்தில் இளங்கலை பட்டம் மற்றும் மெட்ராஸ் பல்கலைக் கழகத்திலிருந்து எம்பிஏ பட்டத்தையும் பெற்றிருக்கிறார்கள். ஃபோர்டு, டொயோட்டா, ஃபியட், தாஜ் குழும ஹோட்டல், கலர் பிளஸ், பாண்ட்ஸ், டி.வி.எஸ், டைம்ஸ், ரீபொக், ஜி.இ., பிபிஎல், கோகோ கோலா, அஷோக் லேலண்ட், கேர்ன் இந்தியா, தமிழ்நாடு சுற்றுலா, முதலியன பல தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனகளுக்காக அவர் பல புகைப்படங்களை தயாரித்துள்ளார். மேலும், பல சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்களில் பணியாற்றியுள்ளார்.

இக்பாலின் "உருவப்படம் & செயல்பாட்டு புகைப்படம்" என்னும் புத்தகம், எட்டு இந்திய மொழிகளிலும் மற்றும் ஆங்கிலத்திலும், மக்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கான கல்வியை அடைய உதவிய முதல் புத்தகமாகும். ஆயிரம் வயதான தஞ்சாவூர் கோவிலின் நினைவாக "வைப்ரேண்ட் ஆட் 1000" புத்தகம் மிகவும் பாராட்டப்பட்டது. அவர் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய குறிப்புகளுக்காக - "நீலகிரிஸ் மலை இரயில்வே" மற்றும் "சோலா கட்டிடக்கலை" ஆகிய இரண்டு காபி மேஜை புத்தகங்களுக்காகவும் புகைப்படம் எடுத்துள்ளார். புகைப்ட உலகில் இக்பாலின் வேலைகள் பிரபலமாகியும் விருதுகள் வடிவத்திலும் அவரை பாராட்டியுள்ளது.

அனுராதா இக்பால்

அனுராதா இக்பால்

ஆன்லைன் நிறுவனத்திற்கு பின்னணியில் படைப்பு சக்தியாக இக்பால் இருக்கும் நிலையில், அனுராதா திட்டமிடல் மற்றும் நடவடிக்கைகளின் தலைவராக உள்ளார். மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர நிபுணராக,ஒரு தசாப்த கால அனுபவத்துடன் இருக்கும், அனுராதா தேசிய / பன்னாட்டுக் கணக்குகளுக்கான திட்டமிடல் மற்றும் படைப்புகளை கையாண்டதுடன் அதற்கான பல விருதுகளும் பெற்றுள்ளார்.

அனுராதா மும்பை பல்கலைக் கழகத்திலிருந்து வர்த்தகத்தில் இளங்கலை பட்டமும் , பொருளாதாரத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர். அவர் விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங் டிப்ளமோ மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் மேலாண்மை பயிற்சி திட்டங்கள் பலவற்றில் கலந்து கொண்டார்.

அனுராதா பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு திட்டங்களில் தன்னை அர்ப்பணித்தவர். கலை மூலம் குழந்தைகள் வாழ்க்கையை வளப்படுத்த முடியும் என்பது இவரின் நேசத்துக்குரிய கனவாகும்.

பிரஹலாட் முரளிதரன்

பிரஹலாட் முரளிதரன்

மக்கள் என்ன நினைக்கிறார்கள், ஏன் ஒரு குறிப்பிட்ட பாணியில் நடந்துகொள்கிறார்கள், என்ன செய்கிறது சமூகம், எது மக்களை ஒன்று சேர்ப்பது, எது அவர்களை பிரிக்கிறது? இவற்றிக்கான தேடல், பிரஹலாத்தை உளவியல் ஆராய்ச்சியைத் தேர்ந்தெடுத்து படிப்பதற்கான காரணமாக அமைத்தது. தனிநபர்களைப் படிப்பதற்காக சமூகத்தை நெருக்கி காலம் அவர் சமூக உளவியலில் முதுகலை பட்டம் பெற்ற பொழுது. அதிலும் மருத்துற்காக உளவியலில் முக்கியத்துவம் பெற்றார். ஒற்றுமையுடன் ஒன்றாக மக்களைக் கொண்டு வரும் எண்ணம் கொண்டார் .

இக்பால் முகமத் போன்ற புகைப்பட கலைஞர்களுடன் கற்றல் அனுபவத்தை எடுத்துக் கொண்டதுடன், இக்பால் உடன் இணைந்து பள்ளிக் குழந்தைகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் புகைப்படக் கலைக்கூடங்களில் உதவிபுரிந்தார். புகைப்பட கலை உலகளாவிய மொழி என்பதால் எண்ணங்களை பிரதிபலிப்பதில் அதிக தவறுகள் இருக்காது என்பதை உணர்ந்தார்.

அங்கு இருந்து பிரகலாத், இக்பால் முகமது & அனுராதா அவர்களுடன் இணைத்து, மக்கள் தங்களை வெளிப்படுத்த புகைப்படம் எடுப்பது எப்படி என்பதற்கு உதவுவதன் மூலம் , அவர்கள் சிறந்த படங்களை எடுத்து சிறந்த தகவல்களை வெளிப்படுத்த உதவினார் .

லைட் & லைஃப் அகாடமியின் தொழில்முறை புகைப்பட திட்டம் மற்றும் 8 மொழிகளில் புகைப்படம் எடுத்தல் பற்றிய இந்தியாவின் முதல் புத்தகம் - “Portrait & Function Photography” போலவே, LLA ஆன்லைன் புகைப்பட திட்டம் ஒரு முன்னோடி முயற்சியாகும்