கெட் கிரியேட்டிவ் வித் போட்டோகிராபி: தமிழ்

உங்களுக்காக வழங்குவது தினமலர்

கெட் கிரியேட்டிவ் வித் போட்டோகிராபி: தமிழ்

உங்களுக்காக வழங்குவது தினமலர்

10
பாடம்
10
வாரம்
தமிழில்
பாடங்கள்
8,000 /-
கட்டணம் (சிறப்பு சலுகை!)

எது ஒரு தனித்துவமான படத்தை உருவாக்க வைக்கிறது? காட்சி, கேமரா மற்றும் அதன் வன்பொருள் பற்றிய அறிவு, ஒளி மற்றும் அதன் குணங்களைப் புரிந்துகொள்வது மற்றும் படத்தின் மூலம் ஒரு கதையை உருவாக்குவதில் நிறம் மற்றும் வடிவமைபின் பங்கு இந்த அம்சங்களைப் பற்றிய ஆழமான புரிந்துணர்வு; இவை அனைத்தும் சேர்ந்து ஒரு ஒற்றை படத்தில் ஆயிரம் வார்த்தைகள் நெசவு செய்யக்கூடிய திறமை உங்களுக்குள் உருவாக்குகிறது. இந்த ஆன்லைன் ஒளி ஓவியக் கல்வியானது படத்தின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்துகொள்ள வைப்பதன் மூலம், அற்புதமான படங்களை எடுக்க உங்களுக்கு உதவுகிறது. இது பயண படம், இயற்கை படம், மக்கள் அல்லது உருவப்படம், தெருக்களில் எடுக்கும் படம், வனவிலங்கு படம் எதுவாயினும், கற்றுக்கொண்ட உங்கள் கலை திறன் பிரகாசமாய் வெளிப்படும்.

என்னென்ன கற்க போகிறீர்கள்?

LLA ஆன்லைன் சிறப்பிற்கான 10 காரணிகள்.

  1. கட்டமைக்கப்பட்ட திட்டங்கள்: இங்கு கற்றல் படி படிப்படியாக நடைபெறுவதால், எல்லோரும் அடிப்படைகளில் இருந்து கற்றுக்கொள்வதையும், வழங்கப்பட்ட தகவல்களை முழுமையாகப் புரிந்து கொண்டதையும் உறுதிப்படுத்துகிறது. LLA ஆன்லைனில் பங்கேற்பாளர்கள், அவர்களின் படைப்பாற்றலின் வளர்ச்சியை வெளிபடுத்துவதை உறுதி படுத்துகிறது. ஒளி ஓவியம் எடுப்பதை கற்றுக்கொள்ள இது ஒரு சிறந்த வழி ஆகும்.
  2. நடைமுறை பயன்பாடு: இத்திட்டம், பங்கேற்பாளர்கள் கோட்பாடுகளைத் தாண்டி, அவர்கள் நியமனம் (அசைன்மென்ட்) மூலம், சொல்லிக் கொடுத்த அனைத்து அம்சங்களும், குறிப்பிட்ட நேரத்தில் நடைமுறையில் எடுக்கப்பட்ட படத்தில் கடைபிடிக்கப் பட்டிருக்கிறதா என்பதை, ஆய்விற்காக சமர்ப்பிக்கப்பட்ட படத்தின் மூலம் உறுதி செய்கிறது. இது ஒரு ஆழமான, அதிக சிரத்தையான கற்றல் அம்சத்தை வளர்க்கிறது.
  3. வழிகாட்டியின் கருத்து: தொழில்முறை ஒளி ஓவியக் கலைஞர்களாக இருக்கும் LLA-வின் பிரத்தியேக முன்னாள் மாணவர்கள் குழு, நீங்கள் சமர்ப்பித்த படத்தை ஆய்வு செய்வதுடன், மேலும் உங்கள் பணியை மேம்படுத்துவதற்கு வழிகாட்டுவர். அணி பற்றி மேலும் விவரங்களுக்கு எங்கள் வழிகாட்டிகள் பக்கம் பாருங்கள்.
  4. சகநபர் குழு ஆய்வு: ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் மன்றத்தில் உள்ள மற்ற பங்கேற்பாளர்களின் பணியை ஆய்வு செய்யும் வாய்ப்பும் உள்ளது. இந்த மன்றத்தின் முக்கிய பகுதியாக நடக்கும் பரஸ்பரக் கற்றல் என்பது அற்புதமாக ஊக்குவிக்கும் முயற்சியாகும்.
  5. பல மொழிகள்: இத் திட்டத்தின் பாடங்கள் தமிழ் மொழியோடு சேர்த்து ஒன்பது இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்திலும் வழங்கப்படுகிறது. இது பங்கேற்பாளர்களுக்கு மிகவும் வசதியான சூழலில் கற்றுக்கொள்ள உதவும்.
  1. கடுமையான தொகுதிகள்: இந்த பாடம், புகழ்பெற்ற தொழில் முறை ஒளி ஓவியக் கலைஞரான இஃபால் முகமது அவர்களால் வடிவமைக்கப் பட்டுள்ளது. இவர் லைட் அண்ட் லைப் அகாடமியை நிறுவியதால், இந்தியாவின் தொழில் முறை ஒளி ஓவியக் கல்விக்கு முன்னோடியாக இருப்பவர். இதனால் LLA ஆன்லைன் பாடங்கள் தொழில் நுட்ப ஆழத்துடனும், தெளிவுடனும் வழங்கப்படுகிறது.
  2. பன்முக தன்மையில் அனுபவம்: LLA ஆன்லைன், ஒரு முழு தலைமுறையின் தொழில்முறை ஒளி ஓவியக் கலைஞர்களின் அனுபவங்களின் அறிவுக்கடலில் இருந்து அகாடமியின் படிப்புகள் வரையப்பட்டுள்ளது.. இது பல்வேறு பின்னணியில் இருந்து வரும் பங்கேற்பாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்.
  3. நிறைவுச் சான்றிதழ்: நீங்கள் அனைத்து நியமனம்/அசைன்மென்ட் தேவைகளை பூர்த்தி செய்யப்பட்டு முன்னேறிவிட்டால், இந்த சாதனையை குறிக்கும் வகையில் LLA ஆன்லைன் மூலம் ஒரு சான்றிதழ் வழங்கப்படும்.
  4. LLA ஆன்லைன் கிளப் உறுப்பினர்: சான்றிதழ் வாங்கிய ஒவ்வொருவரும், LLAONLINECLUB-ன் உறுப்பினராகுவதற்கு தானாகவே தகுதி பெற்றவர் ஆவர். இது உங்களுக்கு , LLA ஆன்லைன் குடும்பத்தில் நடக்கும் அனைத்து வகையான நிகழ்வுகளை பார்ப்பதற்கும், அதன் மூலம் தொடர்ச்சியாக கற்பதற்கும் மற்றும் வரவிருக்கும் பாடங்களையும் / vlogs-யையும் பார்க்க முடியும்.
  5. நிகழ்காலத்தில் இருப்பது: இந்த திட்டம் முடியும் வரையிலும், அதற்கு பிறகும், ஒவ்வொரு பங்கேற்பாளரும், பிரபஞ்சத்தில் அழகை பார்க்கும் திறனை வளர்ந்தது கொள்வர். இதனால் புகைப்படம் எடுப்பதன் மூலம் மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் அடைவர்.

நீங்கள் இந்த திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம். நீங்கள் பதிவுசெய்தவுடன், உங்கள் பதிவுக்குப் பிறகு முதல் திங்கள் அன்று திட்டம் தொடங்கும். நீங்கள் சேர்ந்த பிறகு, LLA ஆன்லைனில் உங்கள் கணக்கில் அனுகல் சான்றுகள் (பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்) வழங்கப்படும். உங்களோடு ஆன்லைனில் இணைந்த குழு நபர்களுடன் உரையாடல் மற்றும் கருத்து பரிமாற்ற அனுமதிக்கப்படுவீர்.

உங்கள் பதிவுக்கு பிறகு தொடர்ந்து வரும் திங்கள் கிழமை அன்று முதல் பகுதியின் முதல் பாடம்/காப்ஸ்யூல் உங்களுக்காக LLA ஆன்லைனில் தரப்பட்டு இருக்கும். காப்ஸ்யூல் உள்ளடக்கமானது வீடியோ மற்றும் / அல்லது PDF மற்றும் / அல்லது மல்டிமீடியா விளக்கப்படத்தின் வடிவில் இருக்கலாம்.

ஒரு நியமனத்திற்கு (அசைன்மென்ட்) ஒரு ஒளி ஓவியம் மட்டுமே அனுப்ப வேண்டும். நீங்களே உங்கள் சிறந்த படத்தை தேர்ந்தெடுத்து அதைப் பதிவேற்ற வேண்டும்.

கருத்துக்களம் எவ்வாறு செயல்படுகிறது?

  • குறிப்பிட்ட நியமனத்திற்கான (அசைன்மென்ட்) தலைப்பில் கீழ் நீங்கள் எடுத்த படத்தை அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடு இரவிற்குள் எப்போது வேண்டுமானாலும் பதிவேற்றம் செய்யலாம்.
  • இந்த கருது களத்தில் மற்றவர்கள் பதிவேற்றிய படத்தையும் நீங்கள் பார்க்கலாம்.
  • நீங்கள் அடுத்தவர் படத்திற்கு 1-5 நட்சத்திர மதிப்பீடு தரலாம். 5 என்பது அதிகப்படிய மதிப்பாகும் .
  • கருத்து களத்தில் நீங்கள் எந்த படத்திற்கும் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
  • நீங்கள் எந்த கேள்வியையும் விவாதத்திற்காக கருத்து களத்தில் பதிவேற்றலாம். அதற்கு மன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் லைட் & லைஃப் அவுட்ரீச் அணியிடம் இருந்தும் கருத்துக்களைப் பெறலாம்.
  • நீங்கள் மறுபடியும் படம் எடுத்து, மீண்டும் அதை ஞாயிற்றுக்கிழமை நடு இரவிற்குள் சமர்ப்பிக்கலாம்.
  • வழிகாட்டிகள் கருத்து களத்தில் உள்ள கேள்விகளுக்கு பதில் அளிப்பது மற்றும் அவர்கள் கருத்துக்களை உங்கள் குழுவிற்கு தருவார்.
  • நீங்கள் சமர்ப்பித்த படம் அடுத்த செவ்வாயன்று தரவரிசைப்படுத்தப்பட்டு மன்றத்தில்(forum) வெளியிடப்படும்.

முக்கிய குறிப்புகள்:

› அனைத்துப் பாடங்களும், 9 வெவ்வேறு இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்படும்
› அனைத்து விவாதங்களும் மற்றும் கேள்விகளும் 9 வெவ்வேறு இந்திய மொழிகள் + ஆங்கிலத்தில் வெளியிடப்படலாம்.
› கருத்துக்கள் 9 வெவ்வேறு இந்திய மொழிகள் + ஆங்கிலம் மொழியில் தெரிவிக்கப்படும்

வழிகாட்டிகளின் கருத்துக்கான குறிப்புகள் :

வழிகாட்டிகள் / மென்டர்ஸ், குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து படங்களையும் ஆய்வு செய்வர் . அவர்கள் குழுவிற்கான பொருத்தமான கருப்பொருளை கண்டறிந்து, அதற்கேற்ற விமர்சனங்களை குழுவிற்கு தருவார். இதற்கு மேலும் வழிகாட்டிகள், படத்திட்டத்திற்கு சம்பந்தமான கேள்விகளுக்கு கருத்துரையாடல் தளத்தில் பதிலளிப்பர் .

வழிகாட்டிகள், படத்தை மதிப்பீடு செய்தவுடன், விமர்சனங்களை தர தாளில் (Grade Sheet) சமர்ப்பிப்பர். இந்த தர தாள், குழுவில் உள்ள அனைவருக்கும் வழங்கப்படும். குழுவில் உள்ள அனைவரும், மற்ற பங்கேற்பாளரின் பணியின் செயல்திறனை பார்க்க முடியும். இந்த ஆசிரிய பணியின் முக்கிய நோக்கம் , குழு உறுப்பினர்களின் பணியில் இருந்து கற்றுக்கொள்வதை ஊக்கப்படுத்துவது ஆகும். இது குழுவாகவும், தனித்தும் திறன்களை வளர்க்க உதவுகிறது.

வழிகாட்டிகளின் மதிப்பீட்டிற்கு பிறகு, பின்வரும் செயல்கள் நடக்கும்:

அ) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட படங்களும் 70-90 வரையிலான மதிப்பெண் வழங்கப்படும்.

அல்லது

ஆ) நீங்கள் சமர்ப்பித்த படங்கள், ஆசிரியர்களால் அங்கீகரிக்கப்படாமல் இருக்கலாம் (குறைந்தபட்சம் 70 மதிப்பெண்ணுக்கு மேல் இல்லை என்றால்), இதன் விளைவாக மீண்டும் படம் எடுக்க வேண்டும். இந்த சமயத்தில், தற்போதைய வார தலைப்பிக்கான படத்தை சமர்ப்பிப்பதுடன் முந்தைய வார தலைப்பிக்கான படங்களையும் நீங்கள் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்பு: ஒரே ஒரு முறை, மீண்டும் படத்தை சமர்ப்பிக்க உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். நீங்கள் மீண்டும் எடுத்தத்தில் தோல்வியடைந்தால், ஆன்லைனில் வழங்கப்படும் அனைத்து வசதிகளையும் நீங்கள் அனுபவிக்கலாம், ஆனால் நீங்கள் LLA ஆன்லைன்லிருந்து சான்றிதழைப் பெற முடியாது.

அல்லது

இ) நீங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக படத்தை சமர்ப்பிக்கவில்லை எனில் தகுந்த காரணத்தை சொல்லி, நீங்கள் கால நீட்டிப்புக்குக் கோரிக்கை தரலாம். இந்த கோரிக்கை நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டு, அது நீட்டிக்கப்படுவதற்கான காரணத்தின் அடிப்படையில், நீட்டிப்பு வழங்கப்பட வேண்டுமா அல்லது இல்லையா என்பதை முடிவு செய்யப்படும். மொத்த பாட திட்டத்திற்கும் சேர்த்து மூன்று முறை கால நீட்டிப்பு கேட்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அதற்கு மேல் சென்றால், LLA ஆன்லைன் இருந்து சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது. ஆனால் நீங்கள் LLA ஆன்லைனில் உள்ளஅனைத்து வசதிகளையும் அனுபவித்து, பங்கேற்று மகிழலாம் .

திட்ட முடிவில், ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெறுவதற்கான அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டால், LLA ஆன்லைனின் சான்றிதழ் வழங்கப்படும்.

பங்கேற்பாளர்களின் ஒளி ஓவியங்கள்

மெண்ட்டர்ஸ்

 

பங்கேற்பாளர்களின் பகிர்தல்கள்

சுவாரஸ்யமான தகவல்கள்

Icon
90 தொழில்முறை ஒளி ஓவியக் கலைஞர்களின் 500கும் மேற்பட்ட படங்கள்
Icon
198 தொழில் நிபுணர்கள் இந்த திட்டத்தில் பணியாற்றியுள்ளனர்
Icon
3 ஆண்டுகால
தயாரிப்பு
Icon
17 ஆண்டுகளா
தொழில்முறை ஒளி ஓவியக் கலைப் பயிற்சியால் வடிவமைக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு

    உங்கள் கேள்விகளை மின்னஞ்சல் அனுப்ப : support@llaonline.in
    பதிவு செய்க

    இந்தியாவின் முதன்மையான ஒளி ஓவியக் கல்லூரியில் இருந்து 10 மொழிகளில் முதல் ஆன்லைன் திட்டம்!
    வடிவமைத்தவர் இக்பால் முகமது, உத்வேகம் தந்தது லைட் அண்ட் லைப் அகாடமி.