Archives

நான்கு வாரங்கள் கடந்து விட்ட நிலையில், இந்த புரோகிராமின் கருத்துக்கள், விரிவுரை வீடியோக்கள், துல்லியமாகவும், தெளிவாகவும்  இருக்கிறது என்பது எனது கருத்து. “மிகவும் பிரமிப்பூட்டும்” படங்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது . ஒவ்வொரு செஷன் முடிவிலும் அசைன்மென்ட் குறிப்புகள் தெளிவாக சுய விளக்கம் கொண்டுள்ளது. நிகழ்ச்சின்  சிறந்த பகுதி என்னவென்றால் சக பங்கேற்பார்களர்களுடன் பகிர்தலும் மற்றும் மெண்ட்டர்ஸின் மதிப்பீடு, அதற்கான விளக்கங்கள் மட்டும் அல்லாமல், அவர்களின் ஆலோசனைகள் நம்மை மேன்படுத்த உதவுகிறது. இது குறித்த நேரத்தில் முடிக்க வேண்டிய புரோக்ராம், இதில் சில மாற்றங்கள் செய்யலாம்.

நான் LLA ஆன்லைன்யை  ஒளி ஓவியக் கலையில் கற்றுகுட்டிகளாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் தேக்க நிலையை தகர்த்தெறிந்து அவர்கள் கனவு படி படம் எடுக்க முடியும் என்பதால் இதை  நான் பரிந்துரை செய்கிறேன்.

நான் இக்பால் அவர்களை  சந்தித்த பின்னர், எனது கேமராவின் படைப்பு திறனை மிக உன்னிப்பாக அனுகுதலோடு கூர்மையாக்கிக் கொள்ள நினைத்தேன்.  இதற்கு எல்.எல்.எ ஆன்லைன் ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்கியதால் நான் உடனடியாக அதில் சேர்ந்தேன். இந்த கோர்ஸ்ல நான்கு வாரங்கள் கடந்த எனக்கு, இது ஒரு அற்புதமான பயணமகத்தான் இருக்கிறது.

இந்த பாட  திட்டத்தின் உள்ளடக்கம் மிகவும் துல்லியமாகவும் தெளிவாகவும் இருக்கிறது. வாராந்திர அசைன்மென்ட்கள்  உண்மையில் மிக அற்புதமாக வடிவமைக்கப் பட்டுள்ளதால் நான் என் சௌகரியமான சூழ்நிலைகளைத் தாண்டி வெளியே சென்று   அற்புதமான மற்றும் ஆக்கப்பூர்வமான திறன்களை வளர்க்க முடிந்தது. மேலும் இந்த தளம் எனது சக பங்கேற்பாளர்களுடன் பேசுவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் வாய்ப்பளித்தது. உண்மையில் வரும் பாடத் தொகுதிகள் மிகவும் ஆர்வம் உள்ளதாக இருக்கும் என்றும், நிச்சயம் இந்த கோர்ஸ் முடிவில் எனது படைப்பாற்றலின் எல்லைகள் விரிவடையும் என்றும் உறுதியாக இருக்கிறேன்.

எல்.எல்.எ  ஆன்லைனில் கற்றல் என்பது மிகவும்  விளையாட்டாகவும், மெருகேற்றுவதக்கவும் , உற்சாகமாகவும்  மற்றும் புத்துணர்ச்சி அளிப்பதாகவும் இருந்தது. என்னை சுற்றியுள்ள எல்லாவற்றையும் அழகாகப் பார்க்கும் விதத்தை  கற்பித்து இருக்கிறது.

நான் இந்த கற்றல் அனுபவத்தை உள்வாங்கி இருப்பதோடு அடுத்து வரும் பாட திட்டத்தில் சேரவும் , எல்.எல்.எ ஆன்லைன்  நிபுணர்களிடம் இருந்து கற்கவும் பேரார்வமாக உள்ளேன்.

நான் இந்த ஆன்லைன் ஒளி ஓவியக்  கலைத் திட்டத்தின் முதல் தொகுதியிலேயே இணைந்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த பாடம் அதிகமான விஷயங்களைக் கற்று தருவதற்காக சிறப்பாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது . ஒளி ஓவியக்  கலையை கற்க தொடங்கும் ஒருவருக்கு இது மிகவும் மகிழ்ச்சிகரமாகவும் அதிக விஷயங்களை கற்று தருவதாகவும் இருக்கும். ஒளி ஓவியம் எடுப்பது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியமானது படத்தில் உள்ள விவரங்களில் ஆழ்ந்த கவனம் செலுத்தி நம் படைப்பாற்றல் தேடலுக்கு இணங்க நம் சௌகரியமான சூழ்நிலையை தாண்டி செயல்படுவதாகும்.

உண்மையில், வீடியோக்கள் மிகவும்  பயனுள்ளதாகவும் மேலும் தொழில் நுட்பம் மற்றும் படைப்பாற்றல் இரண்டின் அற்புதமான உதாரணங்கள் சேர்க்கையால் இது ஒரு உற்சாகமான ஊக்குவிப்பு கற்றலாக இருக்கிறது. அசைன்மென்ட்கள்  மேலும் சிறப்பாக செயல்பட தூண்டும் வகையில் அமைத்திருக்கிறது. இதுவே கலை கற்பித்தலின் சிறப்பான பகுதியாகும். மெண்ட்டர்ஸ் மிகவும் உதவியாகவும் அவர்கள் கருத்துக்கள் என்னை அடுத்த நிலைக்கு ஈர்பதாகவும் இருந்தது. இது போல, வரும் காலத்தில் பல  பட திட்டங்கள் நீங்கள் உருவாக்க எண்ணம் கொண்டிருப்பீர்கள். அதிலும் ஒரு அங்கமாக நன் இணைய விரும்புகிறேன்.

இந்த பாடத்திட்டத்தில் நான் சேர்ந்தது சிறந்த முடிவாக கருதுகிறேன். இந்த பாடத்திட்டத்தில் கற்றது எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.   இதன் மூலம் என்னுள் படிப்படியான வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் இருப்பதை கவனித்திருக்கிறேன். 

வீடியோக்கள் மற்றும் அசைன்மென்ட்கள்  மிகவும் தெளிவாகவும் புரிந்துகொள்வதற்கு எளிதாகவும் ஆக்கபூர்ணமாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. அசைமென்ட்டுகளை படமாக்குவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வீடியோக்களை பார்த்து குறிப்பு எடுத்துக் கொண்டு படம் எடுக்க செல்வேன்.

இந்த பாட  திட்டம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த பகுதி என்னவென்றால் 10 மொழிகளில் இருப்பதே . இதனால், கற்பதற்கு மொழி  ஒரு தடையாக இல்லை. எல்.எல்.எ ஆன்லைன் குழுவிற்கு வாழ்த்துக்கள்.

நீங்கள் மேலும் பல ஆன்லைன் திட்டங்களை வடிவமைத்தால் நன்றாக இருக்கும். உண்மையில் எனக்கு இது  சிறந்த தருணமாக அமைந்தது. எல்.எல்.எ அணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

என் புகைப்படம் திறனில் திடமான மாற்றங்களை உணர்கிறேன். இப்போது, ​​நான் கேமராவில் மேனுவல் மோடினை நம்பிக்கையுடனும் , திறமையுடனும் பயன்படுத்துகிறேன். என் பலவீனமான பகுதிகளை நான் அறிந்தேன், உதாரணமாக, நான் படங்கள் பின்னணி பற்றி மிகவும் கவனமாக இருப்பதுடன் குழப்பமான பகுதிகளை தவிக்க கற்று கொண்டேன். நான் சுற்றியுள்ள விஷயங்களைப் பற்றி மிகவும் கவனமாக இருக்கிறேன், குறிப்பாக சுற்றி இருக்கும் ஒளியின் திசையின் தன்மையை அறிகிறேன். இந்த பத்து வர அனுபவம் என்னை மேலும் பல படங்களை எடுக்க ஊக்குவிக்கிறது.

என் படம் எடுக்கும்  திறனில் திடமான மாற்றங்களை உணர்கிறேன். இப்போது, ​​நான் கேமராவில் மேனுவல் மோடினை நம்பிக்கையுடனும் , திறமையுடனும்  பயன்படுத்துகிறேன். என் பலவீனமான பகுதிகளை நான் அறிந்தேன், உதாரணமாக, படங்களின் பின்னணி பற்றி மிகவும் கவனமாக இருப்பதுடன், குழப்பமான பகுதிகளை தவிர்க்க கற்று கொண்டேன்.  நான் சுற்றியுள்ள விஷயங்களைப் பற்றி மிகவும் கவனமாக இருக்கிறேன், குறிப்பாக சுற்றி இருக்கும் ஒளியின் தன்மைகளை அறிகிறேன். இந்த பத்து வார அனுபவம் என்னை மேலும் பல படங்களை எடுக்க ஊக்குவிக்கிறது.